/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுழைவு வாயில் கட்டமைப்பு சத்தி சாலையில் பணி தீவிரம்
/
நுழைவு வாயில் கட்டமைப்பு சத்தி சாலையில் பணி தீவிரம்
நுழைவு வாயில் கட்டமைப்பு சத்தி சாலையில் பணி தீவிரம்
நுழைவு வாயில் கட்டமைப்பு சத்தி சாலையில் பணி தீவிரம்
ADDED : டிச 03, 2024 07:19 AM
கோபி: காங்., கட்சி சார்பில், கோபியில் நடந்த, அகில இந்திய அரசியல் சீர்திருத்த மாநாட்டு
நினைவாக, 1958 டிச.,1ல், கோபி கரட்டூர் மற்றும் சத்தி சாலையில், சாந்தி தியேட்டர் பஸ்
ஸ்டாப் அருகே, இரு நுழைவு வாயிலை அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து
வைத்தார். கடந்த, 2017ல், சரக்கு லாரி மோதியதில், கரட்டூர் ஆர்ச் தரைமட்டமானது.
இதையடுத்து மக்களின் பங்க-ளிப்பாக, 45 லட்சம் ரூபாயில், அதே இடத்தில்
கட்டப்பட்ட, புதிய நுழைவு வாயில், ௨019 பிப்., மாதம், அப்போதைய அமைச்சர்
செங்கோட்டையன் திறந்து வைத்தார்.இந்நிலையில், கோபி-சித்தோடு வரை, நான்கு வழிச்சாலை விரி-வாக்கப்பணிக்காக,
சத்தி சாலையில், சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்த, மற்றொரு நுழைவு வாயிலை,
2023 டிச., மாதத்தில், நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றினர். இதை-யடுத்து
சத்தி சாலையில், திருமாள் நகர் அருகே நுழைவு வாயில் கட்டமைப்பு பணி தீவிரமாக
நடக்கிறது. ஆறு மீட்டர் உயரம், 26 மீட்டர் நீளத்தில், கட்டமைப்பு பணி தீவிரமாக
நடக்கிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாலை
விரிவாக்கம் செய்ததால், பழைய இடத்திலேயே மீண்டும் நுழைவு வாயில் அமைக்க,
போதிய இடவசதியில்லை. அதனால், நகராட்சியால் அடையாளம் காட்டப்பட்ட
இடத்தில் தான் கட்ட-மைப்பு மேற்கொள்கிறோம். இதுவரை, 50 சதவீத பணி
முடிந்-துள்ளது' என்றார்.