/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானியில் ஆக., 15ல் தண்ணீர் திறக்க பணிகள் மும்முரம்; கலெக்டர்
/
கீழ்பவானியில் ஆக., 15ல் தண்ணீர் திறக்க பணிகள் மும்முரம்; கலெக்டர்
கீழ்பவானியில் ஆக., 15ல் தண்ணீர் திறக்க பணிகள் மும்முரம்; கலெக்டர்
கீழ்பவானியில் ஆக., 15ல் தண்ணீர் திறக்க பணிகள் மும்முரம்; கலெக்டர்
ADDED : ஜூலை 27, 2024 01:14 AM
ஈரோடு: 'கீழ்பவானியில் ஆக., 15ல் தண்ணீர் திறக்கும் வகையில், சீர-மைப்பு பணிகளை விரைவாக முடிக்க யோசனை தெரிவித்-துள்ளோம்' என்று, ஈரோடு கலெக்டர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., சாந்த-குமார், வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் முன்னி-லையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:பட்டா வழங்கல், பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு முக்கிய பணி. இதற்கு ஆறு முதல் எட்டு மாதம் ஆனது. ஏற்கனவே உள்ள சர்வேயர்களுடன், புதிதாக நியமிக்கப்பட்டவர்கள், பிற மாவட்ட பணிக்கு சென்றவர்களும் திரும்ப வந்து விட்டதால், இனி, ஒன்று முதல் ஒன்றரை மாதத்தில் வழங்கப்படும்.அளவீடு செய்யும்போதே ஆக்கிரமிப்பு அகற்றப்படும். சமீ-பத்தில் மாநில அரசின் ஆய்வு கூட்டத்தில், 'ஈரோடு மாவட்டத்-தில்தான் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன' என பாராட்டு தெரிவித்தனர். கீழ்பவானியில் ஆக., 15ல் தண்ணீர் திறக்கும் வகையில், சீர-மைப்பு பணிகளை விரைவாக முடிக்க யோசனை தெரிவித்-துள்ளோம். வரும், 10க்குள் பணிகளை முடித்து, பரிந்துரை அனுப்பி, அறிவிப்பு வரும்படி செயல்படுகிறோம். 15ல் தண்ணீர் திறக்க முடியாவிட்டால், திறப்பு நிகழ்ச்சிக்கு நான் வரமாட்டோன் என நீர் வளத்துறையினரிடம் கூறியுள்ளேன். கேர்மாளம், திங்களூர், ஆசனுாரில் சமீபத்தில் பெய்த மழை, காற்றால் மின் வினியோகம் இல்லை. குடிநீர் வழங்க இயலா-ததால், மாற்று ஏற்பாடு செய்துள்ளோம்.வனத்துக்குள் வாகனங்கள் செல்ல முடியாது என்பதால், மின் ஊழியர்கள், 10, 20 பேர் சேர்ந்து மின் கம்பங்களை துாக்கி செல்-கின்றனர். விரைவில் பணி முடிந்து மின் வினியோகம் செய்யப்-படும்.ஆசனுாரில் துணை மின் நிலையம் அமைக்க அனுமதி வழங்-கப்பட்டுள்ளது. விரைவில் அமைக்கப்படும். சோளகணை உட்பட சில பகுதியில் அதிக அளவில் போர்வெல் துார்ந்ததால், புதிய போர்வெல் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.

