/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடை குறுக்கே தடுப்பணை பணி துவக்கம்
/
ஓடை குறுக்கே தடுப்பணை பணி துவக்கம்
ADDED : டிச 17, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி முதலை மடை பகுதி, நொய்யல் ஆற்றுக்கு அருகில் உள்ளது. இப்பகு-தியில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் உப்புத்தன்மை அளவு அதிகமாக உள்ளதால், நீரின் தரம் குறைவாக உள்ளது.
இப்பிரச்னையை தீர்க்கும் பொருட்டு, நீர் வளத்துறை சார்பில் முதலைமடை ஓடை குறுக்கே, 12.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்வில் திருப்பூர் தி.மு.க., மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு மற்றும் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

