/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வாரச்சந்தை அமைக்க பணி துவக்கம்
/
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வாரச்சந்தை அமைக்க பணி துவக்கம்
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வாரச்சந்தை அமைக்க பணி துவக்கம்
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வாரச்சந்தை அமைக்க பணி துவக்கம்
ADDED : அக் 23, 2024 01:24 AM
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில்
வாரச்சந்தை அமைக்க பணி துவக்கம்
ஈரோடு, அக். 23-
ஈரோடு கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று, அமைச்சர் முத்துசாமியிடம், ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், எவ்வித பணிகளும் இதுவரை நடக்கவில்லை. தங்களை அமைச்சர் ஏமாற்றி விட்டதாக, ஜவுளி வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது.
இதன் எதிரொலியாக, கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், வாரச்சந்தை அமைக்கும் பணியை உடனடியாக துவங்க, மாநகராட்சி நிர்வாகத்துக்கு, அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், கனிமார்க்கெட் வணிக வளாகத்தில், வாரச்சந்தை அமைப்பதற்கான முதற்கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. சோலார் பஸ் ஸ்டாண்ட் போல் ஆ(க்)கி விடாமல், விரைவில் பணியை முடித்து, சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.