ADDED : ஆக 25, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: திருப்பூர், எஸ்.வி.காலனி சுப்பிரமணி மகன் சண்முகசுந்தரம் 33; பிரின்டிங் தொழிலாளி. நண்பர்கள் நான்கு பேருடன் கொடிவேரி தடுப்பணைக்கு நேற்று மதியம் வந்தார். குளிக்க தடை விதிக்கப்-பட்டிருந்ததால், அணை அருகில் உள்ள அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளித்தனர்.
நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற சண்முக-சுந்தரம் நீரில் மூழ்கினார். சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியபோது, குளித்த இடத்தில் இருந்து, ௧௦௦ மீட்டர் தொலைவில் சண்முகசுந்தரம் உடலை மீட்டனர்.