ADDED : ஜூன் 20, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:அசாம்
மாநிலத்தை சேர்ந்தவர் ஜீனத் பர்லா, 50; மனைவி, இரண்டு
குழந்தைகளுடன், பெருந்துறை அருகில் கணக்கம்பாளையத்தில் வசித்தார்.
அங்குள்ள ஒரு ஆயில் மில்லில் தொழிலாளியாக வேலை செய்தார்.
கடந்த, 15ம்
தேதி இரவு அருகில் மளிகை கடையில் பொருட்களை வாங்க நடந்து சென்றார்.
அப்போது பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார்
விசாரிக்கின்றனர்.
