ADDED : மே 12, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், தாசம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுசாமி, 70, விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை விஜயமங்கலம்-வாய்ப்பாடி பிரவு அருகே நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி-யதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்-துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.