/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில் படிக்கட்டில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
/
ரயில் படிக்கட்டில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ADDED : நவ 06, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, திருப்பூர் மண்ணரையை சேர்ந்த ராஜாமணி, 44, பனியன் கம்பெனி தொழிலாளி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். பொம்முடியில் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டு, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 3ம் தேதி மாலை, ரயில் பெட்டியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து திருப்பூர் வந்து கொண்டிருந்தார்.
மகுடஞ்சாவடி அருகே வந்தபோது, படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து அதே இடத்தில் இறந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

