ADDED : ஜன 07, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பு.புளியம்பட்டி திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் வினோத், 30; புன்செய் புளியம்பட்டி, நேருநகரை சேர்ந்த வெண்ணிலா என்பவரை காதல் திருமணம் செய்தார். இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்தார். தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. மனைவியுடன் அவிநாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு மனைவியிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தையை எடுத்துக்கொண்டு அருகே உள்ள தாய் வீட்டுக்கு வெண்ணிலா சென்று விட்டார். வீட்டில் தனியே இருந்த வினோத், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை இறந்தார். புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

