ADDED : ஆக 03, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி
துாரப்பாளையம் காலனியை சேர்ந்தவர் நடராஜன், 65, கூலி தொழிலாளி.
துாரப்பாளையம் காலனியில் உள்ள தங்கமணி, பழனிச்சாமி வீட்டு
முன்பிருந்த வாதநாராயண மரத்தின் கிளைகள் மின் ஒயரில் பட்டு
அவ்வப்போது மின் வினியோகம் தடைபட்டது. இந்நிலையில் தங்கமணி
கூறியதன் பேரில், நண்பர் கைலாசத்துடன் சேர்ந்து தங்கமணி, நேற்று
முன்தினம் மாலை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். மரத்தின் மேலே இருந்து
கிளைகளை கைலாசம் வெட்டி கொண்டிருந்தார். அப்போது ஒரு கிளை நடராஜன்
தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி
இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
