ADDED : ஆக 07, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
அருகே பருவாச்சி புதுாரை சேர்ந்தவர், பூபதி, 40; இரட்டை கரட்டில் உள்ள
ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். பஜாஜ் அவெஞ்சர்
பைக்கில், பவானி - அந்தியூர் சாலையில் தனியார் பால்பண்ணை அருகே நேற்று
முன்தினம் இரவு சென்றார்.
எதிரே வந்த தோஸ்த் வாகனம் பைக் மீது
மோதியதில் பூபதி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு
பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும்
வழியிலேயே இறந்து விட்டார். தோஸ்த் வாகனத்தை ஓட்டி வந்த,
வெள்ளித்திருப்பூரை சேர்ந்த சீனிவாசன், 22, மீது, போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
