/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகனங்கள் மோதிய விபத்தில் தொழிலாளி சாவு
/
வாகனங்கள் மோதிய விபத்தில் தொழிலாளி சாவு
ADDED : மே 29, 2025 01:23 AM
அந்தியூர், அந்தியூர் அருகே செம்புளிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் அங்குல்ராஜ், 33, கூலி தொழிலாளி. அந்தியூரிலிருந்து செம்புளிச்சம்பாளையம் நோக்கி, பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணிக்கு, கந்தாம்
பாளையம் அருகில் சென்ற போது, எதிரில் அந்தியூர் அடுத்த ஆணைகவுண்டனூரை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் கோவிந்தசாமி, 45, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அங்குல்ராஜ் இறந்தார். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.