ADDED : நவ 03, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், நவ. 3-
தாராபுரம், தென்தாரையை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன், 33; நண்பர்களுடன் தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் குளிக்க, நேற்று முன்தினம் மாலை சென்றார். எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடினார்.
அவருடன் சென்ற நண்பர்கள்மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின்படி, தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.