ADDED : செப் 23, 2026 07:32 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
அருகே மறவன்குட்டையை சேர்ந்தவர் மாதன், 45; தற்காலிக மின்வாரிய
ஊழியர். பட்லுார் ஊராட்சி வெள்ளித்திருப்பூர் பொம்மன்பட்டி
குடியிருப்பு வீதியில், ஒரு கம்பத்தில் விளக்கு மாற்றும் பணியில் நேற்று
ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்
பாய்ந்து விழுந்தார்.
அந்தியூர் கொண்டு அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
