/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழிப்பிடத்தில் இறந்து கிடந்த தொழிலாளி
/
கழிப்பிடத்தில் இறந்து கிடந்த தொழிலாளி
ADDED : டிச 27, 2024 01:33 AM
கோபி, டிச. 27-
சத்தியமங்கலம் அருகே, வடக்கு பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன், 64. இவர், கோபியில் உள்ள முறுக்கு கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்தார். இவர் தன்னுடன் வேலை செய்யும் செந்தில்முருகன், 50, என்பவருடன் கடந்த, 24ம் தேதி இரவு, 8:30 மணிக்கு பணி முடிந்தபின், கரட்டடிபாளையத்தில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றனர். நீண்ட நேரமாகியும், கழிப்பிடத்தில் இருந்து கிருஷ்ணன் மட்டும் வெளியே வரவில்லை. இதனால், கழிப்பிடத்தின் கதவை உடைத்து பார்த்தபோது, கிருஷ்ணன் கீழே விழுந்து கிடந்தார். அவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
கிருஷ்ணன் மனைவி மாதவி கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

