/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடனை கேட்டு தாக்கியதால் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு ஈரோட்டில் தொழிலாளி தர்ணா
/
கடனை கேட்டு தாக்கியதால் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு ஈரோட்டில் தொழிலாளி தர்ணா
கடனை கேட்டு தாக்கியதால் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு ஈரோட்டில் தொழிலாளி தர்ணா
கடனை கேட்டு தாக்கியதால் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு ஈரோட்டில் தொழிலாளி தர்ணா
ADDED : ஜூலை 15, 2025 01:25 AM
ஈரோடு, ஈரோட்டில் கடனை திரும்ப செலுத்தாததால், பைனான்ஸ் நிறுவனத்தினர் தாக்கியதாக கூறி, பாதிக்கப்பட்டவர் டீசலை உடலில் ஊற்றி, சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு, வீரப்பன் சத்திரம், கிருஷ்ணா முதல் வீதியை சேர்ந்தவர் கதிர்வேல், 40, கூலி தொழிலாளி. ஈரோடு பார்க் சாலையில் உள்ள ஸ்ரீவிநாயகா கன்சல்டிங் (பைனான்ஸ்) நிறுவனத்தின் முன் டீசலை தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு சாலையில் படுத்து புரண்டு, தற்கொலை செய்து கொள்வதாக, தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற கருங்கல்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையோரம் அழைத்து வந்தனர்.
போலீசாரிடம் கதிர்வேல் கூறியதாவது:
நான் சில ஆண்டுகளுக்கு முன் சுமை துாக்கும் தொழிலாளியாக இருந்தபோது, பைனான்சில் மூன்று வட்டிக்கு, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதில் முக்கால்வாசி செலுத்தி விட்டேன். மீதி, 1.90 லட்சம் ரூபாய் உள்ளது. இரு மாதமாக தொகை செலுத்த முடியவில்லை.
பைனான்ஸ் நிறுவனத்தை சார்ந்த முருகானந்தம், என்னை தகாத வார்த்தை பேசி, நேற்று முன்தினம் அடித்து உதைத்தார். சிறுகசிறுக கடனை திரும்ப செலுத்தி விடுகிறேன் என கூறியும் தாக்கினார். என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் தருமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் கூறியதாவது: கடந்த மூன்றரை ஆண்டுக்கு முன் கதிர்வேல், 1.80 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆறு மாதத்துக்கு முன் வரை, ௭,௦௦௦ ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார். பைனான்ஸ் நிறுவனத்தினர் நிலுவை கடனை கேட்டபோது, இருதரப்புக்கும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.