ADDED : அக் 18, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
கோபி,:திருப்பூர்
மாவட்டம் நீலாம்பூரை சேர்ந்தவர், கார்த்தி, 25, பனியன் கம்பெனி
தொழிலாளி; கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்த, 17 வயது
இளம்பெண்ணை, இரு ஆண்டுகளாக காதலித்தார்.
மகளை கண்டித்து நிலையில்
இருவரும் கடந்த, 5ம் தேதி மாயமாகினர். இளம்பெண்ணின் பெற்றோர்
கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளனர். நீலாம்பூரில் திரிந்த
இருவரையும் கவுந்தப்பாடி போலீசார் நேற்று பிடித்து ஸ்டேஷனுக்கு
அழைத்து வந்தனர். விசாரணையை தொடர்ந்து போக்சோ வழக்கில் கார்த்திக்கை
கைது செய்தனர்.
