/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
/
மாணவி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
ADDED : பிப் 03, 2024 04:15 AM
ஈரோடு: பள்ளி மாணவி பலாத்கார வழக்கில், தறி பட்டறை தொழிலாளிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டவர் குமார், 50, தறி பட்டறை தொழிலாளி. திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், 12 வயது பள்ளி சிறுமியிடம் செல்போனில் பேசி,
பழகினார். வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், கடந்தாண்டு பிப்., மாதம் கடத்தி சென்றார்.
புகாரின்படி விசாரித்த பங்களாபுதுார் போலீசார், போக்சோ சட்டத்தில் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். கட்டாய திருமணம் செய்ய முயன்ற குற்றத்துக்கு, 7 ஆண்டு சிறை; போக்சோ சட்டத்தில், 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக, 2 லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

