ADDED : அக் 25, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண் சரிந்து தொழிலாளி பலி
சென்னிமலை, அக். 25-
சென்னிமலை யூனியன் ஈங்கூர் சிப்காட்டில், ஒரு மில்லில் கட்டுமான பணி நடக்கிறது. இதற்கான கம்பி கட்டும் பணியில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பளையத்தை சேர்ந்த முத்து, 50, அவர் மகன் வெங்கடேஸ்வரன், 27, ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முத்து வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மண் சரிந்ததில் மண்ணுக்குள் புதைந்து முத்து இறந்துவிட்டார். மகன் புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர். புகாரில், 'போதிய பாதுகாப்பு இல்லாததே, தந்தை சாவுக்கு காரணம். அஜாக்கிரதையாக வேலை வாங்கிய ஒப்பந்ததாரர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.

