ADDED : மே 10, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 45, திருமணம் ஆகாதவர். மர வேலை செய்பவர். ஈரோடு-நசியனுார் சாலையில் வில்லரசம்பட்டி நால்ரோடு அருகே, சாலையோரம் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார்.
அப்போது அதிவேகமாக வந்த கார் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்தியதாக, காரை ஓட்டி வந்த கவுதம் மீது, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
