ADDED : நவ 20, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நகொடுமுடி ஆவுடையார்பாறையை சேர்ந்தவர் குழந்தைசாமி, 60, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் தன் வீட்டின் அருகே, தண்டவாளத்தை தாண்டி
ஆட்டுக்கு இலை, தழைகளை பறிக்கமுற்பட்டார்.
அப்போது அவ்வழியே வந்த, பாலக்காடு-திருச்சி பாசஞ்சர் ரயில் மோதியது. இதில், 15 அடி துாரம் துாக்கி வீசப்பட்ட குழந்தைசாமி சம்பவ இடத்திலேயே
பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
விசாரிக்கின்றனர்.

