/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மில் கட்டுமான பணியில் தொழிலா¹¹ளி பலத்தகாயம்
/
மில் கட்டுமான பணியில் தொழிலா¹¹ளி பலத்தகாயம்
ADDED : ஜூலை 25, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, சேலம் மாவட்டம் மேட்டூர் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி, 52, கூலி தொழிலாளி; கோபி அருகே சிங்கிரிபாளையத்தில் தனியார் மில் கட்டுமான பணியில் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டிருந்தார்.
அப்போது, 20 அடி உயரத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். கோபி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின்படி கட்டுமான பணி ஒப்பந்ததாரர் சேலத்தை சேர்ந்த நிர்மல், 40, மீது கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர்.