/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளியை கத்தியால் கிழித்து போன் பறிப்பு
/
தொழிலாளியை கத்தியால் கிழித்து போன் பறிப்பு
ADDED : மார் 04, 2026 08:58 AM
ஈரோடு: ஈரோடு நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த, 25 வயதான அயனிங் மாஸ்டர், ஆன்லைன் செயலி பயன்படுத்தியுள்ளார்.
அதில் அறிமுகமான ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார். அவர் அழைக்கவே இந்திரா நகருக்கு நேற்று முன் தினம் இரவு சென்றுள்ளார். அங்கு காத்திருந்த மர்ம நபர், வாலிபரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த மூன்று பேர், வாலிபரை சரமாரியாக தாக்கினர்.
பின்னந்தலையில் கத்தியால் கிழித்து, அவரிடம் இருந்த மொபைல்போனை பறித்து தப்பினர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த வாலிபருக்கு, 10 தையல் தலையில் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாலிபர் புகாரின்படி, மர்ம ஆசாமிகள் நான்கு பேரை, ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

