/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியுடன் குடும்பம் சிக்கிய தொழிலாளி
/
சிறுமியுடன் குடும்பம் சிக்கிய தொழிலாளி
ADDED : ஆக 03, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பெருந்துறை, சீனாபுரத்தை சேர்ந்த தொழிலாளி அரங்கநாதன், 26; பவானியை சேர்ந்த பிளஸ் 2 முடித்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
இந்நிலையில் கர்ப்பமான சிறுமி, மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். அப்போது, 18 வயது பூர்த்தியாகாதது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில், அரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.