ADDED : நவ 15, 2026 06:29 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
வனத்துறையினர், அத்தாணி சாலையில் ரோந்து பணியில்
ஈடுபட்டிருந்தனர். ஆஸ்பத்திரி மேடு பஸ் நிறுத்த பகுதியில்
சந்தேகப்படும்படி நடமாடிய, சத்தியமங்கலத்தை அடுத்த கொளத்துார்
சண்முகத்திடம், 54, சோதனை செய்தனர்.
இதில் சிறுத்தையின் இரண்டு
நகங்கள் அவரிடம் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை
கைது செய்தனர். சிறுத்தையை வேட்டையாடி நகம் எடுக்கப்பட்டதா? அல்லது
இறந்து கிடந்த சிறுத்தையில் இருந்து எடுக்கப்பட்டதா? இதில் வேறு
யாருக்காவது தொடர்புள்ளதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
