ADDED : ஜூன் 03, 2025 01:38 AM
பவானி, பவானி அருகே எலவமலை, பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இறைச்சி கடை வைத்துள்ளார். இவரது கடையில் பெரியபுலியூர், வளையக்காரபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 40; எலவமலை குமார், 35, தொழிலாளிகளாக பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் கடையில், 500 ரூபாய் காணவில்லை. இதுகுறித்து லோகநாதன், இருவரையும் தனித்தனியே அழைத்து விசாரித்துள்ளார். இது தொடர்பாக ஆறுமுகமும், குமாரும் நேற்று மாலை மது போதையில் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த
குமார், மது பாட்டிலால் ஆறுமுகத்தை தாக்கியுள்ளார். பதிலுக்கு தான் மறைத்து வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியால் குமாரின் கழுத்தில் ஆறுமுகம் குத்தியுள்ளார். படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.