/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கசிவால் எரிந்த தொழிலாளி குடிசை
/
மின் கசிவால் எரிந்த தொழிலாளி குடிசை
ADDED : மே 14, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், ள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலத்தை அடுத்த குன்னிக்காட்டை சேர்ந்தவர் மன்னாதன், 45, கூலி தொழிலாளி. குடிசை வீட்டில் வசிக்கிறார்.
நேற்று மாலை வீட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த மன்னாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயை அணைக்க முடியாததால் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தாலும், குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து விட்டன. வி.ஏ.ஓ., சதீஷ்குமார் ஆய்வு செய்தார்.