ADDED : ஜூன் 20, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே கூகலுார், எல்லமடையை சேர்ந்த கூலி தொழிலாளி முனுசாமி, 45; இவரின் மனைவி ராணி, 40; குடும்பத்துடன் கூலி வேலைக்காக ஒரு வாரத்துக்கு முன் வெளியூர் சென்று விட்டார்.
இந்நிலையில் அவர் வசிக்கும் தகரம் வேயப்பட்ட ஓலை குடிசை வீட்டில் நேற்று காலை, 11:50 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டுக்குள் இருந்த தட்டு முட்டு சாமான்கள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து விட்டன. மின் கசிவால் தீ விபத்து நடந்ததா அல்லது காஸ் கசிவால் விபத்து நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.