தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு


ADDED : ஜூன் 29, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னிமலையை அடுத்த புதுப்பாளையம், முதலைமடையை சேர்ந்த தேவராஜ் மகன் மோகனசுந்தரம், 33; தென்னை மரம் ஏறி தேங்காய் வெட்டும் தொழில் செய்தார். மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

மோகனசுந்தரம் குடும்பத்துடன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சி, கருக்குபாளையம் பகுதியில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் வாடகைக்கு வசித்து வந்தார். மோகனசுந்தரத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் பலரிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கணவன்-, மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் உள்ள மாமனார் வீட்டு பொங்கல் விசேஷத்திற்காக மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோகனசுந்தரம் நேற்று முன்தினம் காலை சென்றுள்ளார். விசேஷம் முடிந்து இரவில் அவர் மட்டும் வீட்டுக்கு வந்தார். நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்த பழனிச்சாமி சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில், இரும்பு சட்டத்தில் சேலையால் துாக்கிட்ட நிலையில் மோகனசுந்தரம் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us