தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.4 கோடி மதிப்பிலான பணிகள் துவக்கி வைப்பு

ரூ.4 கோடி மதிப்பிலான பணிகள் துவக்கி வைப்பு

ரூ.4 கோடி மதிப்பிலான பணிகள் துவக்கி வைப்பு


ADDED : மார் 06, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சென்னிமலை, பெருந்துறை யூனியன் பகுதியில், 4.07 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

இதன்படி வடமுகம் வெள்ளோடு பஞ்., ராமநாயக்கன்பாளையம் பகுதியில், 5 லட்சம் ரூபாயில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, கவுண்டச்சிபாளையம் பஞ்., வள்ளிபுரத்தான்பாளையம் முதல் காட்டுபாளையம் வரை, 43.65 லட்சம் ரூபாயில் சாலை புதுப்பித்தல், கள்ளியங்காட்டுவலசு பகுதியில், 2.64 லட்சம் ரூபாயில் வடிகால் வசதி, புதிய தார்சாலை பணி, ராசாம்பாளையம் பகுதியில், 9 லட்சம் ரூபாயில் ரயில்வே பாலத்துக்கு புதிய கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டது, குமாரவலசு பஞ்.,ல், 30 லட்சம் ரூபாயில் புதிய பஞ்., அலுவலக கட்டடம் என, 4.07 கோடி ரூபாய் மதிப்பிலான முடிந்த பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார். குமாரவலசு பஞ்., தண்ணீர்பந்தல் பகுதி துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம்

வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us