/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமதேனு கல்வியியல் கல்லுாரியில் பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை
/
காமதேனு கல்வியியல் கல்லுாரியில் பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை
காமதேனு கல்வியியல் கல்லுாரியில் பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை
காமதேனு கல்வியியல் கல்லுாரியில் பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை
ADDED : நவ 01, 2024 01:24 AM
காமதேனு கல்வியியல் கல்லுாரியில்
பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை
சத்தியமங்கலம், நவ. 1-
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காமதேனு கல்வியியல் கல்லுாரியில் கற்றல் கற்பித்தலில் தற்போதுள்ள, புதிய தொழில்நுட்பமான இன்டெரேக்டிவ் போர்டு செயல்முறை பற்றிய ஒருநாள் பணிமனை நடைபெற்றது.
பணிமனையில், கோவை பிளன்டெட் பெடகாஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அகஸ்டஸ் ரிச்சர்டு மற்றும் பென்க்யூ இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவி மேலாளர் சந்த்லால் ஆகியோர் வல்லுனர்களாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இப் பணிமனையில், 'உளவியலும் தொழில்நுட்பமும்' என்ற தலைப்பில் உளவியலாளர் திவ்யதாரணி பேசினார்.
நெய்நஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் கணினி பொறியாளர் யுவராணி, 'கல்வியில் செயற்கை நுண்ணறிவு' என்ற தலைப்பில் பேசினார். பணிமனையை கல்லுாரி செயலர் அருந்ததி, இணை செயலர் மலர் செல்வி ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் ராம்பிரபு வரவேற்றார். உதவி பேராசிரியர் ராஜ்குமார் ஒருங்கிணைப்பு செய்தார். பணிமனையில் பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.