ADDED : டிச 06, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் என கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தினர் உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டனர். மருத்துவர் சூர்யலட்சுமி தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.