/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில்அழகு கலையால் உலக சாதனை நிகழ்ச்சி
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில்அழகு கலையால் உலக சாதனை நிகழ்ச்சி
ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில்அழகு கலையால் உலக சாதனை நிகழ்ச்சி
ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில்அழகு கலையால் உலக சாதனை நிகழ்ச்சி
ADDED : மே 03, 2025 01:06 AM
ஈரோடு:ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில், அழகு கலையால் உலக சாதனை நிகழ்ச்சி கல்லுாரி கலை அரங்கில் நடந்தது.
கோபி மயூரம் மேக் ஓவர் அகாடமி சார்பில், 30 நிமிடத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்து, உலக சாதனை நிகழ்ச்சி கோபி அருகே உள்ள ஒத்தகுதிரை வெங்கடேஸ்வரா ைஹ டெக் இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பெங்களூரு, சென்னை, கோவை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்ட அழகுகலை நிபுணர்கள் கலந்து கொண்டு உலக சாதனை செய்தனர். இந்த நிகழ்வு, உலக அதிசயங்களின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
பல அழகுகலை நிபுணர்கள், 30 நிமிடத்திற்குள் அலங்காரம் செய்து தங்களது திறமையை காண்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அனைத்து அழகுகலை நிபுணர்களுக்கும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வெங்கடேஸ்வரா கல்லுாரி செயலாளர் கருப்பணன், சான்று வழங்கினார்.
மயூரம் மேக் ஓவர் அகாடமி தலைவர் கீர்த்தனாசாய்ராம், வோர்ல்டு வொண்டர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு இயக்குனர் மகேஸ்வரி, கல்லுாரி சி.இ.ஓ., கவுதம், முதல்வர் தங்கவேல், துணை முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லுாரியின் மேலாண்மை துறை தலைவி முனைவர் சத்தியசுந்தரி செய்திருந்தார்.