/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு
/
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு
ADDED : ஆக 09, 2025 01:26 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடி மாத, நான்காவது
வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் காட்சியளித்தார்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, நடுமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், பத்ர காளியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
* பவானி, செல்லியாண்டியம்மன் கோவில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதே போல் மேற்கு தெரு மாரியம்மன், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காமாட்சியம்மன், குருப்பநாயக்கன்பாளையம் எல்லை மாரியம்மன், பழைய பஸ் ஸ்டாண்ட் பச்சியம்மன், தேவாபுரம் பத்ரகாளியம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி, பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில் பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் மொடச்சூர் தான்தோன்றியம்மன், கோபி சாரதா மாரியம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.