/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எழுதிய மரத்தையன் கோவில் தக்கார் பொறுப்பேற்பு
/
எழுதிய மரத்தையன் கோவில் தக்கார் பொறுப்பேற்பு
ADDED : செப் 18, 2025 01:57 AM
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே, ஆலாம்பாளையம் எழுதிய மரத்தையன் கோவில் தக்காராக, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நேற்று பொறுப்பேற்றார்.
வெள்ளித்திருப்பூர் அருகே ஆலாம்பாளையத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எழுதிய மரத்தையன் கோவில் உள்ளது. கடந்த ஜூன் மாதம், இக்கோவிலுக்கு தக்காரை நியமிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலராக உள்ள மகேந்திரன், ஆலாம்பாளையம் வனக்கோவிலுக்கு சென்று, காமாட்சியம்மன் கற்சிலை, முருகன் கற்சிலை, இயந்திர முரசு உள்ளிட்ட பொருட்களை கணக்கெடுத்து, தக்காராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இது சம்பந்தமான, பேனர் வனக்கோவில் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவில் தக்காராக, இந்து சமய அறநிலைய துறை அலுவலர் பொறுப்பேற்பதை விரும்பாத, பூசாரி வகையறாக்கள், மடப்பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். இதையடுத்து, ஒரு வாரத்துக்குள், மடப்பள்ளியை திறந்து, அந்தியூர் தாசில்தார், போலீசார் முன்னிலையில், நகைகள் உள்ளிட்ட பொருட்களை கணக்கெடுத்து, கோவிலை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என, தக்கார் மகேந்திரன் கூறினார். சரக ஆய்வாளர் சிவமணி, பவானி
டி.எஸ்.பி., ரத்தினக்குமார், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கஸ்துாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.