ADDED : ஜூலை 30, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் ஆடி மாத அம்மன் வழிபாட்டின் அங்கமாக, 1,008 மஞ்சள் நீர் கலச ஊர்வலம், இந்து முன்னணி சார்பில் நேற்று நடந்தது.தாராபுரம் தென்தாரை சின்ன காளியம்மன் கோவிலில், தீர்த்த கலச ஊர்வலத்தை பா.ஜ., கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி துவக்கி வைத்தார். சர்ச் ரோடு, பூக்கடை கார்னர் வழியாக சென்ற ஊர்வலம், ராஜவிநாயகர் கோவில் அருகே நிறைவடைந்தது.
இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் நளினி, ராதாமணி உள்பட திரளானோர் மஞ்சள் நீர் கலசம் சுமந்து சென்றனர். சிலைக்கு பெண்களே அபிஷேகம் செய்தனர். பின் இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில செயலாளர் செந்தில்குமார், ஆடி மாத அம்மன் வழிபாடு சிறப்புகள் பற்றி விளக்கினார்.