ADDED : செப் 22, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் நிஷா, 45; கோபி கடைவீதியில் ஒரு நகை கடையில் விற்பனையாளராக உள்ளார். கடந்த, 19ல் கடைக்கு வந்த, 35 வயது பெண், மோதிரம் வாங்குவது போல் நடித்து, மூன்று கிராம் எடையில் இரு மோதிரங்களை திருடி சென்றார்.
நிஷா புகாரின்படி, கோபி போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் மோதிரத்தை திருடிய திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி, 30, என்ற பெண்ணை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.