/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேலை கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு
/
வேலை கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு
ADDED : செப் 07, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோடு, பெரியசேமூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ராஜா மகன் ஹரி, 19; அலுமினிய கதவு, ஜன்னல் சரி செய்யும் வேலை செய்தார். சில நாட்களாக வேலை கிடைக்காததால், குடும்பத்தினரிடம் சரியாக பேசாமல் இருந்தார்.
வீட்டில் தனியாக இருந்தவர் நேற்று முன்தினம் சேலையால் துாக்கிட்டு கொண்டார். குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.