ADDED : செப் 18, 2026 06:53 AM
ஈரோடு:மதுரை
மாவட்டத்தை சேர்ந்த, 21 வயது இளம்பெண், பெங்களூருவில் ஐ.டி.,
நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 16ல் மதுரைக்கு
மைசூரு-துாத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில்
பயணித்தார்.
17ம் தேதி அதிகாலை ஈரோடு ஸ்டேஷனை கடந்து சென்றபோது, அதே
பெட்டியில் அவரது இருக்கைக்கு மேலே பயணித்த ஆண், பாலியல் தொல்லை
கொடுத்ததால் இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். சத்தம்கேட்டு சக பயணிகள்
ஆசாமியை பிடித்து, கரூர் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பெண் அளித்த
புகாரின்படி விசாரணை நடத்தினர். சம்பவ நடந்த இடம் ஈரோடு ஸ்டேஷனுக்கு
உட்பட்டது என்பதால், ஈரோடு ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னியம்மன் மேடு பிரகாஷ் நகரை
சேர்ந்த செல்வவிநாயகன், 50, என்பது தெரியவந்தது. பெண் வன்கொடுமை
தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு
கிளை சிறையில் அடைத்தனர்.
