ADDED : செப் 07, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு, வைராபாளையம், நாட்ராயன் கோவில் வீதியை சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ், 20; கூலி தொழிலாளி. ஈரோடு பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி யின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.
விசாரித்த போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து சந்தோஷை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்த விற்றதாக, கருங்கல்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.