ADDED : ஆக 08, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், தெப்பக்குளம் வீதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், வீரப்பன்சத்திரம் பாரதிவீதியை சேர்ந்த சுந்தரராஜ் மகன் இளங்கோவன், 25, என்பதும், போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 16 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.