ADDED : செப் 04, 2025 02:09 AM
ஈரோடு, சிவகிரி மாரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல், 58, விவசாயி. தோட்ட வீட்டில் வசிக்கிறார். கடந்த, 25 இரவு வீட்டில் மனைவியுடன் இருந்தார். மகன் ஹரிஷ் வெளியே சென்று இருந்தார். மர்ம நபர் நடமாட்டம் அறிந்த தங்கவேல், வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து மர்ம நபர் வீட்டில் புகுந்து, போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யமஹா பைக்கை எடுத்து சென்றார்.
தங்கவேல் அளித்த புகார்படி, சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து, தங்கவேல் வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆதாரமாக கொண்டு, பைக் திருடி சென்ற மர்ம நபரை தேடினர். இதில் தேனி, பெரியகுளம் அழகாபுரி அம்மாபுரம் ஜெ.ஜெ,நகர் செல்வம் மகன் தினேஷ் குமார், 34, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தினேஷ்குமார் மீது கஞ்சா விற்றது தொடர்பாக, கோவையில் உள்ள போதை பொருள் ஒழிப்பு சிறப்பு பிரிவில் வழக்கு நிலுவை
யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.