/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
/
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
ADDED : மார் 17, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த சென்னியங்கிரி வலசை சேர்ந்தவர் ஜெயமணி, 70; இவரது வீட்டுக்குள் புகுந்த ஆசாமி, மிளகாய் பொடியை கண்ணில் துாவி, ஆறு பவுன் நகையை பறித்து சென்றார். சென்னிமலை போலீசார் களவாணியை தேடி வந்தனர். ஜெயமணி வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு குடியிருந்த முகா-சிப்பிடாரியூர் மணிகண்டன், 4௧, மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்-பட்டது. போலீசார் தேடிய நிலையில் கேரளாவுக்கு தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் பெருந்துறை
குற்றப்பிரிவு போலீசார், மூணாறில் பதுங்கியிருந்த மணிகண்-டனை நேற்று கைது செய்தனர். ஆறு பவுன் நகையை மீட்டு, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.