/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் டாக்டரிடம் நகை பறித்த வாலிபர் கைது
/
பெண் டாக்டரிடம் நகை பறித்த வாலிபர் கைது
ADDED : ஆக 29, 2025 01:38 AM
தாராபுரம், :தாராபுரம் மைனர் ராமநாதன் நகரை சேர்ந்த டாக்டர் சவுமியா, 30; கடந்த, 26ம் தேதி மதியம், பொன்னாபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சிகிச்சை அளித்து விட்டு, மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவர் போட்டிருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து பறந்தனர். அவர் புகாரின்படி தாராபுரம் போலீசார், பைக் கொள்ளையரை தேடி வந்தனர்.
இந்நிலையில் வாகன சோதனையில், பைக்கில் வந்த இருவரை நேற்று இருவரை மடக்கினர். அதில் ஒருவன் தப்பித்து விட ஒருவன் மட்டுமே சிக்கினான். விசாரணையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ்ராஜ், 24, என்பதும், பெண் டாக்டரிடம் நகை பறித்ததும் தெரிய வந்தது. தப்பிய ஆசாமியை தேடி வருகின்றனர். பிரகாஷ் ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

