ADDED : நவ 22, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்சோவில்
வாலிபர் கைது
ஈரோடு, நவ. 22-
ஈரோடு, வைராபாளையம், நேதாஜி வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 31; ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சைல்டு லைன் மூலம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சில மாதங்களுக்கு முன் ராமச்சந்திரன் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரனை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி, ஈரோடு கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.