/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை டாஸ்மாக் பாரில் வாலிபருக்கு பாட்டில் குத்து
/
சென்னிமலை டாஸ்மாக் பாரில் வாலிபருக்கு பாட்டில் குத்து
சென்னிமலை டாஸ்மாக் பாரில் வாலிபருக்கு பாட்டில் குத்து
சென்னிமலை டாஸ்மாக் பாரில் வாலிபருக்கு பாட்டில் குத்து
ADDED : டிச 03, 2024 01:52 AM
சென்னிமலை டாஸ்மாக் பாரில்
வாலிபருக்கு பாட்டில் குத்து
சென்னிமலை, சென்னிமலையில் அண்ணமார் தியேட்டர் எதிரில் டாஸ்மாக் பார் செயல்படுகிறது. சென்னிமலை, காந்திநகரை சேர்ந்த பனியன் கம்பெனி கட்டிங் மாஸ்டர் ரமேஷ், 48, சென்னிமலை, ஈங்கூர் ரோடு, பட்டேல் வீதி ராம்குமார்-, 37, ஆகியோர் நேற்று பிராந்தி குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராம்குமார் ஆவேசமடைந்து, பிராந்தி பாட்டிலை உடைத்து ரமேஷின் இடது கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். காயத்தால் துடித்தவரை மற்றவர்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சென்னிமலை போலீசார் ராம்குமாரை கைது செய்தனர்.