ADDED : ஆக 12, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே ஜம்பையை சேர்ந்தவர் தமிழரசன், 35; மேட்டுநாசுவன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் மாலை ஜம்பையில் ஓடும் பவானி ஆற்றில் குளிக்க சென்றவர், தண்ணீரில் மூழ்கி பலியானார். அப்பகுதி மக்கள் தகவலின்படி பவானி போலீசார் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

