ADDED : ஆக 05, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சிராஜ்குமார், 18; நஞ்சை ஊத்துக்குளி தனியார் கால்நடை தீவன தயாரிப்பு மில்லில் சுமை துாக்கும் தொழிலாளியாக மூன்று மாதமாக வேலை செய்தார். நண்பர்கள் இருவருடன் கணபதிபாளையம் நால்ரோட்டில் உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு, நேற்று சென்றார்.
முன்னதாக அங்குள்ள காவிரி ஆற்றில் சிராஜ்குமார் குளித்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், சிராஜ்குமார் சடலத்தை மீட்டனர்.