/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆற்று புதைமணலில் சிக்கிய வாலிபர் பலி
/
ஆற்று புதைமணலில் சிக்கிய வாலிபர் பலி
ADDED : அக் 26, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருப்பூர் எட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 28; திண்டுக்கல் அருகே சகோதரி வினோதினி வீட்டு காதணி விழாவுக்கு, திருப்பூரில் இருந்து உறவினர் விமல், 20, நண்பர்கள் நித்தின்குமார், 28, வரதராஜ், 30, ஆகியோருடன், ஆம்னி வேனில் நேற்று சென்றார்.
மதியம் 3:00 மணியளவில் தாராபுரம் அமராவதி புதிய பாலத்தின் கீழ் செல்லும் ஆற்றில் அனைவரும் குளிக்க சென்றனர். அந்த இடம் புதைமணல் பகுதி என்பதை அறியாமல் குளித்த கார்த்தி ஆற்றில் மூழ்கி பலியானார்.

