ADDED : டிச 03, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம், டிச. 2-
எலச்சிபாளையம் அருகே, மரப்பரை கிராமம், பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் தமிழ்குமரன், 36. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அவரது டூவீலரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, வையப்பமலையில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி ஏற்றிச்சென்ற, 'ஈச்சர்' வேன் டூவீலர் மீது நேருக்குநேர் மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தமிழ்குமரன் பலியானார். இவருக்கு, சுகன்யா, 30, என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.